• Wed. Aug 17th, 2022

தேங்காய்பால் அன்னாசிபழ சூஸ்:

Byவிஷா

Mar 12, 2022

தேவையான பொருட்கள் :
அன்னாசி பழம் – பாதி, ஐஸ் கட்டிகள் – 5, தேங்காய் பால் – 1 கப், தேன் – ருசிக்கு ஏற்ப
செய்முறை:
அன்னாசி பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் ஐஸ்கட்டி, தேன், 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்சியில் அடித்து வடிக்கட்டி மீண்டும் மிக்சியில் இட்டு தேங்காய் பால் சேர்த்து நல்ல நுரை பொங்க அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்கவும். சூப்பரான தேங்காய் பால் – அன்னாசி ஜூஸ் ரெடி. அன்னாசி பழம் சூடு என்று குடிக்க பயப்படுபவர்கள் இப்படி தேங்காய் பால் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கவும். சளியை கூட கட்டுபடுத்தும்.

Leave a Reply

Your email address will not be published.