

பான் கேக்
தேவையானவை:
மைதா மாவு – ஒரு கப், பால் – ஒரு கப், பேக்கிங் பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, வெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
வெண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும். தோசைக்கல்லை சூடுசெய்து, வெண்ணெய் தடவி மாவை ஒரு பெரிய கரண்டி அளவு மாவை ஊற்றவும் (தேய்க்க வேண்டாம்). சுற்றிலும் வெண்ணெய் சேர்த்து, இரு பக்கமும் பொன் நிறமானதும் எடுக்கவும்.
இதை தேன் அல்லது ‘மேபல் சிரப்’புடன் பரிமாறவும்.
