தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு அரை கப், இஞ்சி-பூண்டு விழுது 1 டீஸ்பூன், எலுமிச்சை அரைப் பழம், கடுகு, மஞ்சள் துள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க: சுக்கு – சிறிய துண்டு, திப்பிலி, மிளகு தலா 1 டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவையுங்கள். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வறுத்துப் பொடித்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.
கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து இறக்கும் முன் எலுமிச்சை சாறு சேருங்கள். இந்தக் குழம்பை சாதம், இட்லி, சப்பாத்தியுடன் சாப்பிடலாம். மழைக்காலத்துக்கு ஏற்ற ஆரோக்கிய குழம்பு.
மூலிகைக் குழம்பு:
