• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கல்கண்டு வடை:

Byவிஷா

Jun 24, 2022

தேவையான பொருட்கள்:

உளுந்து-1 கோப்பை- (110 கிராம் அல்லது அரை உலக்கு), பச்சரிசி 1ஃ4 கோப்பை
கல்கண்டு- 3ஃ4 கோப்பை, உப்பு ஒரு சிட்டிகை, எண்ணெய் – வடை பொரித்தெடுக்க – 250 மில்லி, துவரம் பருப்பு 1 தேக்கரண்டி

செய்முறை:
கல்கண்டைத் தட்டி தூளாக்கிகொள்ளவும், அல்லது ஆச்சு கல்கண்டும் பயன்படுத்தலாம். உளுந்தையும், அரிசியையும் அளந்து, நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை நன்கு வடித்துவிட்டு ஆட்டுரலில் போட்டு அரைக்கவும், சிறிது கூட தண்ணீர் சேர்க்கக்கூடாது. தண்ணீருக்கு பதிலாக பொடித்த கல்கண்டை இடை இடையே சேர்த்து அரைக்கவும்.நல்ல பந்து போல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். மாவை சிறு சிறு வடைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேகவுடவும். கல்கண்டு வடை தயார். இனிப்பு சேர்த்திருப்பதால் மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.