• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

வெஜிடபிள் பாஸ்தா சூப்:

Byவிஷா

Mar 19, 2022

பாஸ்தா – 1ஃ2 கப், காய்கறிகள் – 1ஃ4 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி அல்லது விருப்பமான காய்கறிகள்), கொண்டைக்கடலை – 2 1ஃ2 டேபிள் ஸ்பூன், பாஸ்தா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன், சோள மாவு – 1 டீஸ்பூன், வெங்காயம் – 1ஃ2 (சிறியதில் பாதி மற்றும் பொடியாக நறுக்கியது), பூண்டு – 3 பற்கள் (பொடியாக நறுக்கியது), ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன், மிளகு தூள் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவுதண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் காய்கறிகளை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.கொண்டைக்கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து, அதனை தனியாக குக்கரில் போட்டு, 6 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு, பாஸ்தாவை போட்டு, உப்பு சேர்த்து, பாஸ்தா வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி, நீரை வடிகட்டி, பின் அதனை தனியாக ஒரு பௌலில் போட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, வேக வைத்த கொண்டைக்கடலை, காய்கறிகளை சேர்த்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் பாஸ்தா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து பிரட்டி விட வேண்டும். காய்கறிகள் சாஸ் உடன் சேர்த்து ஒரு பதத்திற்கு வந்ததும், அதில் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் இறுதியில் அதில் சோள மாவு சேர்த்து, நன்கு கிளறி விட்டு, கலவையானது சற்று கெட்டியாக, சூப் போன்று வரும் போது, அதனை இறக்கி, அதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால், அருமையான வெஜிடேபிள் பாஸ்தா சூப் தயார்.