

தேவையான பொருட்கள்:
முலாம் பழம் – 1 எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
செய்முறை:
முலாம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, ஒரு ஸ்பூனை வைத்து, அதில் இருக்கின்ற கனிந்த பகுதியை எடுக்க வேண்டும். அடுத்து மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கனிந்த பகுதியை போட்டு, சர்க்கரை, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், குளிர்ச்சியைத் தரும் முலாம் பழ ஜுஸ் தயார்.
