• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Apr 2, 2022

வெயிலுக்கு ஏற்ற சுவையான தயிர்சாதம்:

தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 1 கப், பால் – அரை கப், புளிக்காத புதிய தயிர் – ஒன்றைரைகப், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது – 1 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிது, கடுகு – அரை டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 3, பொடியாக நறுக்கிய முந்திரி – 4 டேபிள் ஸ்பூன், திராட்சை – 20, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.
செய்முறை :
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாதத்தை குழைவாக வேக வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் தாளிதக் கலவை, சேர்த்து நன்றாக கலக்குங்கள். அருமையான ஸ்பெஷல் தயிர் சாதம் ரெடி.