மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தவர் சகுந்தலா.,

இந்நிலையில் இவர் திமுக விலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக விற்கு மாறினார்., இந்நிலையில் கடந்த 2025 ல் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடந்த திமுக ஆட்சியில் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவியில் இருந்தும் வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தும் சகுந்தலா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்., இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் வரை வழக்கு நடத்தி அரசின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து தீர்ப்புகள் வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த உள்ள எனவும்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி நகராட்சி தலைவர் பதவி நீக்கம் உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது.,

இன்று நீதிமன்ற உத்தரவுடன் அதிமுக கவுன்சிலர்களுடன் வந்து நகராட்சி ஆணையாளர் சங்கர் கணேஷ் -டம் வழங்கி நகர மன்ற தலைவராக பதவி ஏற்பதற்கு வந்த நிலையில் மேல் உத்தரவு வரவேண்டும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்த நிலையில் பதவி ஏற்காமல் திரும்பிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.,
பின்னர் செய்தியர்களுக்கு பேட்டியளித்த சகுந்தலா.,
கடந்த ஆக-14 ந் தேதி நீதிமன்ற உத்தரவு வந்தது 15 மற்றும் 16 ந்தேதி விடுமுறை என்பதால் இன்று நகர மன்ற தலைவராக பதவி ஏற்ப்பதற்காக நகராட்சிக்கு வந்துள்ளோம்., ஆனால் நகராட்சி ஆணையாளர் எனக்கு அதிகாரம் இல்லை எனவும் மேல் உத்தரவு வரவேண்டும் என தெரிவித்ததாகவும்.,
மேலும் நீதிமன்ற உத்தரவை நகராட்சி நிர்வாகம் மதிப்பதில்லை எனவும் 4 வது முறையாக நீதிமன்ற உத்தரவை பெற்று நகராட்சிக்கு வந்துள்ளதாகவும் என்னை பதவியில் அமர வைக்க வில்லை எனவும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அலைக்கழிப்பு செய்து வருவதாகவும், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக எந்தத் தீர்ப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை எனவும்.,மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதாகவும் தெரிவித்தார்.,





