• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!!

ByA.Tamilselvan

Feb 11, 2023

சபரிமலையில் மாசி மாத பூஜைகளுக்காக நாளை மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலையில் 2022 – 2023ஆம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது. 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனாவுக்கு பிறகு என்பதால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.
கோவில் நடையை, மாலை 5 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 5 நாள்கள் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும். இதற்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு நடைபெற்றது. தினமும் அதிகாலை 5 மணி முதல், மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். பிப்ரவரி 17 வரை தினமும் இரவு 7 மணிக்கு படிபூஜை நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.