மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. முன்னதாக ,
வராகி அம்மன் சன்னதியில், சண்டி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
இதைச் தொடர்ந்து, அம்மனுக்கு பக்தர்களால்,
பால், மஞ்சள்பொடி, இளநீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, சந்தனம், போன்ற அபிஷேக பொருள்களால், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதை அடுத்து, அம்பாளுக்கு, சந்தன அலங்காரத்தால், அலங்காரம் செய்யப்பட்டு ,
சிறப்பு பூஜை நடந்தது. இதில் ,ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை அடுத்து, கோவில் முன்பாக திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதை அடுத்து, பக்தர்களுக்கு ,
கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகக் குழுவினர் மற்றும் மகளிர் விழா குழுவினர் செய்திருந்தனர்.