புதுக்கோட்டை மாவட்டம் அண்னவாசல் பிராம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையான பகுதி நேர நியாய விலை கடையை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி அருகே உள்ள பிராம்பட்டி பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக நீண்ட தூரம் சென்று அரசின் நியாய விலை பொருட்களை வாங்கி வந்துள்ள நிலையில் அப்பகுதியிலேயே பொதுமக்களின் வசதிக்காக 110 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் இந்த நியாய விலை கடையை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் அண்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஆர் எஸ் மாரிமுத்து மற்றும் திமுக கழக நிர்வாகிகள் KRN.போஸ் குளவாய்ப்பட்டி சண்முகம் சுசீந்திரன் கிட்டு கார்த்தி அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.