
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு கூறினார். மேலும்,
8 கோடி மக்களை நம்பி, மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான்.

தமிழகத்தில் கட்சிகளின் கொடிகளில் உள்ள வண்ணம் மாறுகிறது. ஆனால் கொள்கைகளில் எண்ணம் மாறவில்லை, என்றும் கூறினார். திமுகவை அகற்றிவிட்டு அடுத்த கட்சியை ஆட்சியில் அமர வைக்கலாம் என்பது, பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசை திருமணம் செய்வது போல் தான் என்ற சீமான்,
நான் தேர்தலில் தோல்வி அடைந்தால் அது என்னுடைய தோல்வி அல்ல மக்களின் தோல்வி, வெற்றி அடைந்தால் அது என்னுடைய வெற்றி அல்ல அது மக்களின் வெற்றி என்றும் கூறினார்.
