உணவுப் பொருகளை இழிவுபடுத்தும் விதமான வீடியோ வைரல் எதிரொலி – காரைக்குடி பேக்கரி | ஹோட்டல்கள், இறைச்சி கடைகளில் திடீர் சோதனை – 300 கிலோ ரஜ்க், 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஹோட்டல்கள், கோழிஇறைச்சி கடைகள் உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேல்முருகன் உதவியாளர்கள் கருப்பையா, மாணிக்கம் உள்ளிட்டோர் திடீர் சோதனை மேற்கொண்டனர் இதில் திருச்சி சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் சமைக்க வைத்திருந்த கெட்டுப்போன புரோட்டா மாவு ,மட்டன் , சிக்கன் இறைச்சி என 50 கிலோ பறிமுதல் செய்தனர் மேலும் கோழி இறைச்சி கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தரம் குறைந்த கோழி இறைச்சி 50 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .
மேலும் இணையத்தில் வைரலான வடநாட்டு தொழிலாளர்கள் குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவு பொருளை இழிவுபடுத்தி பேக்கிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் காரைக்குடியில் உள்ள ரஸ்க் தயாரிக்கும் தயாரிப்பு நிலையங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட சுமார் 300 கிலோ ரஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் பின்பு அங்கு இருந்த வடநாட்டு பணியாளர்களின் பணியாளர்களின் கைகளை சுத்தமாக வைத்து பணி செய்ய வேண்டும் மாஸ்க் அணிந்து தடுப்பூசி அவசியம் அனைவரும் போட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன் பின்பு மற்றொரு ரஸ்க்தயார் செய்யும் கம்பெனியில் சுகாதாரமற்ற முறையில் ரஸ்க் தயாரிப்பதை கண்டு அதிர்ந்து போன அதிகாரிகள் அங்குள்ள ஊழியர்களை வெளியேற்றி அந்த கம்பெனி தற்காலிகமாக மூடினர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு காரைக்குடி மக்கள் வரவேற்ப்பு தெரிவித்துள்ளனர்.