• Wed. Apr 24th, 2024

இறந்த மணிகண்டன் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்

கல்லூரி மாணவர் மணிகண்டன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அரசு வேலை மற்றும் சிபிஐ விசாரணை அமைத்திட வேண்டும்.மாநில அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்.

மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டது. இங்கிலாந்து ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழக காவல்துறை செயல்பட்டு இந்திய அளவில் சிறந்த காவல்துறையாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்தது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக திமுக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை அது மட்டுமல்லாது தமிழக காவல்துறையில் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக காவல் துறையில் பணிபுரியும் ஒரு சிலரின் செயல்பாடுகள் உள்ளன.

தற்போது தென் மாவட்டங்களில் கடைக்கோடி மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் உள்ளது. இதில் முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்க்கோழிஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதை சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை 4.12.2021 சனிக்கிழமை அன்று முதுகுளத்தூர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கடுமையாக தாக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ரத்த வாந்தி எடுத்து ஞாயிற்றுகிழமை நள்ளிரவில்
பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தப் பகுதி வீரம்,விவேகம் அன்புக்கு அடையாளமாக திகழும் பகுதியாகும் தற்போது ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பத்திற்கு நீதி புதைக்கப்பட்டுள்ளது. தற்போது நீதியரசர்கள் இதற்கு மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட்டு இருந்தார்கள்.

திமுக ஆட்சி காலத்தில் இது புதிதல்ல ஏற்கனவே இது போன்று பல்வேறு நிகழ்வு நடந்துள்ளது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் சட்டக் கல்லூரி வாசலில் மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் கொலைவெறி தாக்குதல் செய்தனர். இதை அருகில் நின்றுகொண்டிருந்த காவல்துறை யார் உத்தரவுகாகநின்றுகைகட்டி வாய்மூடி நின்று வேடிக்கை பார்த்தது. இதில் மாணவர் பாரதி கண்ணா கடுமையாகத் தாக்கப்பட்டார். புரட்சித்தலைவி அம்மா இந்த கொலைவெறி தாக்குதலை கண்டித்து நீதியை நிலைநாட்டிட தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து அதனை தொடர்ந்து மாணவரணி சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உத்தரவிட்டார். அப்போது நான் மாநில மாணவரணி செயலாளராக இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை அம்மாவின் உத்தரவுக்கிணங்க நடத்தினேன்.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பலியான மாணவர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரண உதவி மற்றும் குடும்பத்திற்கு அரசு வேலை தர வேண்டும் அதேபோல் மரணத்தில் காவல்துறை சேர்ந்த மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

ஆகவே ஏழ்மை நிலையில் இருக்கும் பெற்ற தாய் நீதி கேட்டு போராடி வருகிறார். வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தையும் நீதி கிடைக்க வேண்டும் கேட்டு வருகிறார். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும் என்றுமாநில அம்மா பேரவை அரசுக்கு இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது .

அதுமட்டுமல்லாது இந்த ஆட்சியில் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் தற்போது மாணவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே மனிதநேயத்துடன் நீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் இதுபோன்று சம்பவங்கள் இனியும் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *