பிரபலமான பிக்பாஸ் -6 நிகழ்ச்சியில் இந்தவாரம் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 49-வது நாட்களை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார்.. தற்போது பிக்பாஸ் வீட்டில் 14 போட்டியாளர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.