நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அப்பர் பவானி சாலையில் கோரக்குந்தா தாய் சோலை கேரண்ட்டின் பகுதிகளில்.
இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்களால் வாகன வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் தனியார் வாகன ஓட்டிகள் கூறுகையில் கோரகுந்தா கேரன்ட்டின் பகுதிகளில் அடர்ந்து வனப் பகுதியை ஒட்டி உள்ளதால். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவு உள்ள பகுதியாகும்.வளைவுகளில் மேச்சலில் ஈடுபடும் காட்டெருமை மான் போன்ற வன விலங்குகள் நிற்கின்றன கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது.எதிரே வரும் வாகனங்களுக்கு வளைவுகளில் முட்புதர்கள் மூடி சிறிய வழியாக மாறி உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை.விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளன.கவனமுடன் வாகனங்களை இயக்கினாலும் அவ்வப்போது வாகனங்களின் கண்ணாடி உதிரி பாகங்கள் உடையகின்றன என வேதனை தெரிவித்தனர்.
உடனடியாக இரு புறங்களிலும் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.