நீலகிரி மாவட்டத்தில் உள்நாட்டு மலர் செடிகள் மட்டுமின்றி, வெளிநாடுகளை தாயகமாக கொண்ட அரியவகை மலர் செடிகள் காணப்படுகிறது. குறிப்பாக பூங்காக்களில் பலரின் கவனத்தை ஈர்க்கும் பேர்ட் ஆப் பேரடைஸ் என்ற மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இவை பறவைகளின் சொர்க்கம், கொக்கு மலர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலர்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை கலந்த நிறங்களில் காணப்படுகிறது. திருமண விழாக்களில் இந்த மலர்களை கொண்டு பூங்கொத்து தயாரித்து பரிசளிப்பது வழக்கம். தற்போது அரசு விருந்தினர் மாளிகை, உதகை தாவரவியல் பூங்கா, கவர்னர் மாளிகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் பேர்ட் ஆப் பாரடைஸ் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த பூக்களின் சீசனாகும். நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர்.