• Fri. Apr 19th, 2024

தென்காசி – புளியங்குடியில் தொடரும் சாலை விபத்துக்கள்… காவலரே பலியான கொடுமை

Byஜெபராஜ்

Oct 14, 2022

காவலர்கள் பற்றாக்குறையால் புளியங்குடியில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. காவலரே பலியான சம்பவம் பொதுமக்களை அச்சமடையச்செய்துள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடைபெறுகிறது அதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி எலுமிச்சை சாகுபடியில் தமிழகத்தில் முதல் இடம் வகிக்கிறது அதனால் இப்பகுதியில் தமிழகம் மட்டுமல்லாது அயல் மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.இங்கு மக்கள் தொகையில் சுமார் 80ஆயிரம் பேர் உள்ளனர். மேலும் தென்காசி மாவட்டத்திலேயே கல்லூரி அதிக அளவிலும் பள்ளிகள் அதிக அளவில் உள்ளது புளியங்குடியாகும். அதனால் பள்ளி மாணவ மாணவிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.இதனால் புளியங்குடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. போலீசார் இல்லாததால் கல்லூரி மாணவர்கள் சாலைகளில் பைக்கில் அதிவேகமாக செல்வதும் குறிப்பாக பல்சர் பைக்கில் மின்னல் வேகத்தில் செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.


இந்நிலையில் நேற்று மாலையில் இரண்டு பைக்குகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். புளியங்குடி தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அம்மன் குலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் சங்கரன்கோவிலை சேர்ந்த அரவிந்த்,முகமது ரியாஸ் ஆகிய மூன்று பேரும் கல்லூரி முடித்து மாலை 4 மணி அளவில் சங்கரன்கோவில் நோக்கி பல்சர் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தனர், பைக்கை மாணவர் முகேஷ் ஓட்டி சென்றார் சங்கரன்கோவில் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகில் செல்லும்போது முள்ளிக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரியும் மணி செல்வி மற்றும் அவரது மகன் அபிஷேக் கண்ணன் ஓட்டிவந்த ஸ்கூட்டி மீது வேகமாக மோதியது. இதில் ஐந்து பேரும் தூக்கி வீசப்பட்டனர் ஸ்கூட்டி ஓட்டி வந்த அபிலேஷ் கண்ணனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆசிரியை மணி செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.


பைக்கில் வந்த அரவிந்த் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது முகேஷ்குமார் முகமது ரியாஸ் ஆகியோருக்கு கையில் கை கால்எலும்பு முறிவு ஏற்பட்டது அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் எஸ்ஐ பரத்லிங்கம் அலெக்ஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் நேற்று மாலையில் சேர்ந்தமரம் தலைமை காவலர் சுந்தரையா மீது மது போதையில் காரை ஓட்டி வந்த கார் மோதியதில் பலியானார். அதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் புளியங்குடி காவல் நிலையத்தில் 50 போலீசார் மட்டுமே உள்ளதால் போலீசார் அதிக பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதனால் புளியங்குடி பகுதிக்கு போக்குவரத்து காவலர்கள் நியமித்து போக்குவரத்தையும் மாணவர்களின் போக்குவரத்து அலட்சியப் போக்கையும் கண்காணிக்க வேண்டும் எனவும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு பாடங்களை பயிற்றுவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *