• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அரசு எந்திர அத்துமீறலை தோலுறிக்கும் ரைட்டர்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா .இரஞ்சித் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை தயாரித்திருக்கிறது நீலம் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரைதயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.


. காவல்துறையில் எழுத்தராக (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.


காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் ட்ரெய்லர் மூலம் காண முடிந்தது.


‘போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு’… ‘காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம், மலிந்துக்கிடக்கும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல வசனங்கள் ஆட்சிகள் மாறினாலும் அரசு எந்திரத்தின் செயல்பாட்டை அப்பட்டமாக வெளிக்கொண்டுவரும் படமாக “ரைட்டர்” இருக்கும் என்று தோன்றுகிறது. கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.