• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!

Byவிஷா

Jun 6, 2023

தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
தமிழ்நாட்டில் முக்கிய உணவுப் பொருளாக அரிசி இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் நெல் அரிசிகள் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் பொன்னி அரிசி ரகங்கள் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த மாதம் தொடக்கத்திலிருந்தே அரிசி விலை தொடர்ந்து மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.
அரிசி விலை உயர்வு குறித்து பேசியுள்ள தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் சக்திவேல், முன்னதாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து சன்னமாக பொன்னி ரகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகவும், ஆனால் சமீப காலமாக அந்த ரகங்களை அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால், தமிழக அரிசி ஆலைகளுக்கு வரும் ஆந்திரா, கர்நாடகா அரிசி ரகங்கள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.