தமிழ்நாடு சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டத்தின்படி தனியாரால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் உரிமம் பெறும் முறை மற்றும் அதற்கான நிபந்தனைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படி 08.01.2019 அன்று அனைத்து தனியார் பணிபுரியும் மகளில் விடுதி நடத்துபவர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களால் கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 26 தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தவிர வேறு எவரும் உரிமம் பெற சென்னை மாவட்ட ஆட்சியரை அணுகவில்லை.
‘தற்போது தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதாகவும்; உள்ளுறைவோர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகவும், உள்ளுறைவோர்களிடம் அதிகமான தொகையை முன்பணமாக வசூலிப்பதாகவும், முள்பனாத்தொகையை உள்ளுறைவோர்களுக்கு முறையாக திருப்பி தருவதில்லை என்றும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதனைத் தொடர்ந்து, சில விடுதிகளை ஆய்வு செய்த போது உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும், புகார்களில் தெரிவிக்கப்பட்ட விதமாய் விடுதிகள் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதும், உள்ளுறைவோர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதும், உள்ளுரைவோர்களின் சேர்க்கை முறையாக பதிவு செய்யாமல் இருப்பதும் தெரியவந்தது. அவ்வாறு முறையாக உரிமம் பெறாமல் இயங்கிவரும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைபடுத்துதல் சட்டம் 2014-ன்படி தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகளை நடத்திட விடுதி உரிமையாளர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
1. விடுதியின் உரியம் பெற தீயணைப்பு சான்றிதழ், சுகாதாரச் சான்றிதழ், கட்டட உறுதித்தன்மை சான்று மற்றும் Form D உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
2 பகுதி V பிரிவு 15(1)-ன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்டடத்தில் விடுதி நடத்தப்பட வேண்டும்.
3. பகுதி V பிரிவு 15(3)-ன்படி விடுதியில் CCTV கேமரா பொருத்தப்பட வேண்டும்.
4. விடுதி காப்பாளர் கட்டாயம்: பெண்ணாகவும், விடுதி பாதுகாவலர் ஆண் அல்லது பெண்ணாகவோ இருக்க வேண்டும்.
5. விடுதி பாதுகாவளர் காவல் துறையினரால் பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6. விடுதியில் சேர்க்கை பதிவேடு, நடமாடும் பதிவேடு, விடுப்பு / விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
7. பகுதி V பிரிவு 15(1)-ன்படி ஒரு உள்ளுறைவோர் தங்குவதற்கு சராசரியாக 120 சதுர அடி இடத்தினை ஒதுக்கீடு செய்து தருவதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும் தளிக்குடும்பமாக வசிப்பதற்கென்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் பணிபுரியும் மகளிரை தங்க வைத்து எந்த உரிமமும் பெறாமல் பணிபுரியும் மகளிர் விடுதியாக உரிய உரிமம் மற்றும் போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி உத்தரவிட்டுள்ளார்.