• Wed. Apr 24th, 2024

ஒரே நாளில் 150-ஆ.. கடலூரில் காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு கட்டுக்குள் வந்த கொரோனா 2வது அலை, கடந்த சில நாட்களாகவே தனது கோரமுகத்தை மீண்டும் காட்டத்தொடங்கியிருக்கிறது. எனவே தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில்களில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு தடை விதித்தும், கோல்களில் திருமணம் நடத்துவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுப முகூர்த்தநாளான இன்று கடலூரில் பிரசித்தி பெற்ற திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் நூற்றுக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. கோயில் முன்பு திருவிழா கூட்டம் உறவினர்கள் குவிந்ததால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிடப்பட்டது. மேலும் திருவந்திபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களிலும் 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த பகுதியில் இன்று ஒரே நாளில் 150 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததுள்ளது.

இந்த திருமணங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரே இடத்தில் திரண்டு இருந்ததால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படுள்ளது. அங்கே திருமணத்திற்கு வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகமானதால் அங்கு காவல்துறை சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், முககவசம் அணியாதவர்கள் முககவசம் அணியுமாரும் ஒலிப்பெருக்கி வைத்து கூறப்பட்டது, காவல்துறை எவ்வளவு எடுத்து கூறினாலும் காவல் துறையினரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *