


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 27) சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் சிறுபான்மை அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அதற்கான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிய உள்ளார். அதன் பின் அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளது.

