• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

காதலுக்கு எதிர்ப்பு – பிளஸ் டூ முடித்த மாணவனும், மாணவியும் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை

ByKalamegam Viswanathan

May 16, 2023

மதுரை பாலமேடு அருகே பிளஸ் டூ முடித்த மாணவனும், மாணவியும் தனித்தனியே தூக்கிட்டு தற்கொலை. தங்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு எடுத்த பரிதாபம்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் வீரபத்திரன். இவர் அருகிலுள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மகள் பவானி இவர்கள் இருவரும் பாலமேடு அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்த போது காதலித்து வந்துள்ளனர். பள்ளி விடுமுறை காலம் என்பதால் வீரபத்திரன் தன் காதலி பவானியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தனது அம்மாவிடம் பவானியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த வீரபத்திரன் தாயார் வீரபத்திரனிடம் தகராறு செய்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் தனது காதலி பவானியை அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வீரபத்திரன் தனது தோட்டத்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தனது காதலன் இறந்த தகவலறிந்து அதிரச்சியடைந்த பவானியும்
இன்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த பாலமேடு போலீசார் வீரபத்திரன் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும், பவானி உடலை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கும் உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து இரு வீட்டாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிளஸ் டூ படித்துள்ள 17 வயது மற்றும் 16 வயது மாணவ, மாணவிகள் காதலித்து, அதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பாலமேடு பகுதியில் மிகுந்த சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.