மதுரையில் மழை காரணமாக சேதம் அடைந்த மின் கம்பிகளை மாற்றுவதற்கு வீடு தோறும் பணம் வசூலித்த மின்வாரிய ஊழியர்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.!!
மதுரை மாநகர் பகுதிகளில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழையானது பெய்தது
இதன் காரணமாக மதுரை தல்லாகுளம் சின்ன சொக்கிகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் பழமையான மரங்கள் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன இதனால் தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய வணிக நிறுவனங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் செல்லாமல் தடைபட்டது .இந்த நிலையில் பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் அருந்து விழுந்த மின் கம்பியை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து பணிகளில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று மின் கம்பிகளை மாற்றியதற்காக தல ஆயிரம் ரூபாய் வரையும் கேட்டுள்ளனர் தெருவில் மின் கம்பிகள் மழை காரணமாக அருந்து விழுந்த நிலையில் அதனை மாற்றுவதற்கு தாங்கள் எதற்கு பணம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் சிலர் கேட்ட நிலையிலும் கூட தங்களுக்கு பணம் கொடுத்தால் தான் கனெக்சன் கிடைக்கும் என பதிலளித்துள்ளனர்
மேலும் மின்வாரிய ஊழியர்களால் மின்வாரியத்தால் நியமிக்கப்பட்ட சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மின்சார வயர்களை மாற்றும் பணிகளில் ஈடுபடாமல் தற்காலிக பணியாளர்களை வயர்களை மாற்றுவதற்கு பயன்படுத்திவிட்டு பணம் சொல்லில் மட்டும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர் .இது குறித்தான வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பதில் அளித்துள்ள மின்வாரிய அதிகாரி வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு பணம் பெற்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.