• Thu. Dec 12th, 2024

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை தராத இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்..!

Byகாயத்ரி

Jan 26, 2022

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஆர்பிஐ அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

நிறைவாக தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. இதுதொடர்பாக நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சிலர் ஏன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர். இது வாக்குவாதமாக மாறியது.பிறகு ரிசர்வ் வங்கி உயரதிகாரிகள் இதில் தலையிட்டு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர். இதன் பிறகு அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.