
தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போடப்பட்டுள்ள மின்சாரம் வழங்கும் பிரதான வயர்களில் காலாவதி ஆனதால் மாற்று வயர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. பொதுவில் 50 வருடங்களுக்கு மட்டுமே இந்த வயர்கள் பயன்படும் என்றும் அதற்குப் பிறகு மாற்று வயர்களை பொருத்த வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது. இந்நிலையில் 70 ,80 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அதே வயர்கள் வழியாகத்தான் தற்போது மின்சாரம் செல்கிறது .இதனால் ஒரு சில சமயம் மின்சாரம் குறைவாகவும், சில சமயங்களில் அதிகமாகவும் மின்சாரம் செல்கிறது .அப்போது கிணறுகளில் போடப்பட்ட மோட்டார்கள், ஆழ் துளை கிணறுகளில் போடப்பட்ட மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. இதனால் கிராம ஊராட்சி நிர்வாகம் சிரமம் அடைந்து வருகிறது .சீரான மின் விநியோகம் செய்ய மின்சார துறை வயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனீட்டாளர்கள் கூறுகின்றனர்.
