• Fri. Apr 19th, 2024

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் இட ஒதுக்கீடு வேண்டி கோரிக்கை

Byகுமார்

Dec 8, 2021

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தகுதியான மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு தவறுவதாக, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தங்களது வேதனையை தெரிவித்துவருகின்றனர். 2017ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய நீட் தேர்வில் அரசு பள்ளிகளை விட அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மதுரை தெற்குமாசி வீதி பகுதியை சேர்ந்த வடிவேல் – கணேஷ்வரி தம்பதியினரின் மகளான மீனா ஸ்ரீ என்ற மாணவி மதுரையிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில் 274 மதிப்பெண் பெற்று வாய்ப்பு தவறிய நிலையில் இந்த ஆண்டு 2020-21 ஆம் ஆண்டிற்கான நீட்தேர்வில் 464 மதிப்பெண் பெற்றுள்ளார்.

ஆனாலும் அவருக்கு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5சதவித இட ஒதுக்கீடு போன்று அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 2.5சதவித இட ஒதுக்கீட்டை வழங்கினால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஏராளமான ஏழை எளிய பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் பயனடைவார்கள் எனவும் மாணவி தேவி தெரிவிக்கிறார். எந்த ஒரு சிறப்பு பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல் கடினமாக படித்து நீட் தேர்வில் 464மதிப்பெண் பெற்றும் மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைக்காதது கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகிறார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியான அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடான 2.5 இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மாணவி தெரிவித்துள்ளார்.

தன்னைபோன்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வாய்ப்பு இல்லாத நிலையில் தமிழக அரசின் அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *