உலகில் முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்களை வேலை நாட்களாக, வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார போட்டித்திறனை நவீனப்படுத்துவதில் செயல்திறனை அதிகரிப்பதுடன், பணி மற்றும் வாழ்க்கை சூழல் சமநிலைப்படுத்துதல் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக ஐக்கிய அரபு அமீரக அரசின் இந்த வார இறுதிநாள் நீட்டிப்பு அமைந்துள்ளது.
இதன்படி, இஸ்லாமிய நாடுகளில் இறைவணக்க நாளாக வெள்ளிக்கிழமை உள்ளது. எனவே, அந்த நாளின் மதியத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வார இறுதி நாட்கள் தொடங்குகின்றன என அறிவிப்பு வெளியாகி உள்ளது.