ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பாற்கடலில் நடை பயிற்சி செல்லும் இடத்தில் செல்லும் உயர் அழுத்த மின் வயரை மாற்றக் கோரிக்கை வைத்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருப்பாற்கடல் உள்ளது. இங்கு நீர் நிறைந்துள்ளது. திருப்பாற்கடலை சுற்றி சமீபத்தில் நகராட்சியில் நடை பயிற்சி செய்பவர்களுக்காக நடை பயிற்சி பாதை அமைக்கப்பட்டது. பாதையில் மேல் பகுதியில் மின்வாரியத்தின் உயர் அழுத்த மின்கம்பி செல்வதால் நடை பயிற்சி மேற்கொள்வோர்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. எனவே மின்வாரியத்தில் இருந்து உயர் அழுத்த மின் கம்பியை சற்று உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

