விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (இருப்பு) திருவில்லிபுத்தூர் மூலம் வத்தராயிருப்பு தாலுகா, தாணிப்பாறை கிராமத்தில் உள்ள ராம் நகரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 21-12-2024 இன்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நடைமுறை படுத்துவது திட்டம் 2015 குறித்த சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இம்முகாமினை விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி K. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் விருதநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சார்பு நீதிபதி S.P. கவிதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் M. வீரண்னன், முதன்மை சார்பு நீதபதி J. ஜெய சுதாகர், கூடுதல் சார்பு நீதிபதி R. ரத்தனவேல் பாண்டியன் திருவில்லிபுத்தூர் வழக்கறிங்க சங்க செயலாளர் மற்றும் சங்க உறுப்பினர்கள் வத்தராயிருப்பு வழக்கறிஞர் சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் முதன்மை மாவட்ட நீதபதி தலைமை உரையில் ‘சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிபதிகளாகிய நாங்கள் மலைவாழ் மக்களை தேடி இங்கு வந்துள்ளோம், இக்காலகட்டத்தில் கல்வி மிகவும் அவசியம் ஆகவே உங்கள் குழந்தைகளை கண்டிப்பாக கல்வி படிக்க வையுங்கள். உங்களுக்கென்று தமிழ அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்தால் தான் நீங்களும் இந்த சமூகத்தில் முன்னேற முடியும். மேலும் தங்களுக்கு சட்டம் சார்ந்த பிரச்சனைகள் சட்டம் சாராத பிரச்சனைகள் எதுவாயினும் இலவசமாக ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் இந்தியாவில் எங்கு இருந்தாலும் சட்ட ஆலோசனை பெற யாவருக்கும் நீதி பெற சமவாய்ப்பு என்ற உயர்ந்த சிந்தனையை அடிப்படையாக கொண்டு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவானது கட்டணமில்லா தொலைப்பேசி எண் 15100 அறிமுகப்படுத்தியுள்ளது’ என்று கூறினார்.
இந்த முகாமில் கலந்து கொண்ட அனைத்து மலைவாழ் மக்களுக்கும் போர்வைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த முகாமிற்கான பாதுகாப்பு எற்பாடுகளை வத்தராயிருப்பு தாலுகா காவல் ஆய்வாளர் மாரியப்பன் செய்திருந்தார். இந்த முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ராம்கோ நிறுவனத்தின் டிரஸ்ட் மேலாளர் முருகேசன் செய்திருந்தார். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை சி.எஸ்.ஆர் நிதி மேலாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.