• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இன்று டிசம்பர் 20ஆம் தேதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் ஐயப்ப சீசன் காலங்களில் கடற்கரைச் சாலை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சீசன் கடைகள் ஏலம் நடைபெறுவது வழக்கம் . ஆனால் இந்த ஆண்டு இந்த சீசன் கடைகள் நடத்த மதுரை ஐகோர்ட் தடை விதித்தது .இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகள் அமைப்பதை நிறுத்தினர். இந்நிலையில் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த ஒரு வாரமாக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஏராளமான கடைகள் கடற்கரைச் சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது.

இதனை இன்று டிசம்பர் 20ஆம் தேதி கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நடைபெற்றது.