• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

Byகுமார்

Dec 20, 2021

மதுரை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து நிர்வாக குழு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் பணியாளர்கள் தொடர்பான கோரிக்கைகளான, பயிர்கடன் வழங்குவது தொடர்பாக மாநில அளவில் வழிகாட்டி நெறிமுறைகள் நிர்ணயிப்பது என பதிவாளர் அலுவலகம் தெரிவித்தும் இதுவரை வழங்கப்படவில்லை.

மேலும் பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் அரசால் வழங்கப்படும் பொருட்கள் அளவு குறைவாக வழங்குவதை தவிர்க்கும் பொருட்டு பாக்கெட் வடிவில் வழங்க கோருதல், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மத்திய வங்கியில் மேற்கொள்ளும் ரொக்க பரிவர்த்தனைக்கு 2 % TDS பிடித்தம் செய்வதால் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நலிவுற்று வருகிறது. மேலும் செயலாளர்களுக்கு பொதுப்பணி நிலைதிறன் மூலம் இடமாற்றம் என்ற முறையில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட கோருதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை அடுத்து மாவட்ட மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை அனுப்பவுள்ளனர்.