• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

அண்ணாவின் சிலை முன்பு தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,

கன்னியாகுமரி தி.மு.க.,கழக செயலாளரும், கன்னியாகுமரி நகராட்சி தலைவருமான குமரி ஸ்டீபன் தலைமையில்.73 கிலோ எடை உள்ள கேக்கை. நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வெட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபனுக்கு‌,கழக சிறுபான்மை நலப் பிரிவு துணை அமைப்பாளர் நிசார் கேக் ஊட்டினார்.

இந்த நிகழ்வில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த
முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ், குமரி மீனவ பிரிவு காங்கிரஸ் உறுப்பினர் ஜவஹர், தி.மு.க., இலக்கிய அணியின் துணை அமைப்பாளர் அன்பழகன், நகராட்சி 10, மற்றும் 15_ வது வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்கள் இக்பால்,பூலோகராஜா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கெய்சர்கான்,நகர துணை செயலாளர்
ரெஞ்சித்குமார்,நகர இளைஞரணி அமைப்பாளர் தாமஸ்ஷியாம் உட்பட தி.மு.க.வின் பல்வேறு பொருப்பாளர்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் அன்று குமரிக்கு வருகை தந்த பல்வேறு மாநிலத்தவர்களுக்கு.நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் இனிப்பு வழங்கினார்.