நாகர்கோயில் மாநகரத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பை சந்தித்த மக்களுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளான ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் மார்த்தாண்டம் நெஸ்லே நிறுவனமும் இணைந்து 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள் அடங்கிய பொட்டலங்களை நாகர்கோயில் மாநகர ஆணையாளர் ஆஷா அஜித்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பல ஆயிரம் ரூபாய் இழப்புகளை சந்தித்த மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையில் இந்த பொருட்கள் ஜூனியர் சேம்பர் அமைப்பு நிர்வாகிகளின் முயற்சியால் வழங்கப்பட்டுள்ளது.