தொடர் மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் நிவாரண உதவிகள் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் தென்காசிஆசாத் நகரில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் சுப்பிரமணியன் என்பவரது வீடு இடிந்து சேதம் ஏற்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த நிலையில் தகவலறிந்த தென்காசி நகர செயலாளர் சாதிர் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா ஆகியோர் இன்று பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உதவி தொகை மாவட்ட திமுக சார்பில் 5 ஆயிரமும், நகர திமுக சார்பில் அரிசி காய்கறிகள் போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்தநிகழ்ச்சியில்சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தென்காசி நகர கழக செயலாளர் சாதீர் வார்டு கழகச் செயலாளர் மூக்கையா, மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்