தென்காசி மாவட்டம் கடையம் அருகே சித்த மருத்துவ முகாமை மாவட்ட செயலாளர் தொடங்கிவைத்தார்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள மயிலப்பபுரத்தில் சிவசக்தி ஆயுஷ் பொதுநல அறக்கட்டளை சார்பில் இலவச சித்த மருத்துவ முகாமினை தெற்கு மாவட்ட திமுக பொருப்பாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் தொடங்கிவைத்தார்.

இதில் நாடி பரிசோதனை மூலம் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட பிற நோய்களும் கண்டறியப்பட்டு அதற்கான ஆலோசனைகளும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை மருத்துவர் இராஜநாயகி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் சக்திவேல், ஒன்றிய துணை பெருந்தலைவர் மகேஷ் மாயவன் உட்பட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.