• Sat. Apr 27th, 2024

மதுரையில் கோவில் நிலத்தை மீட்டுத்தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Byகுமார்

Nov 12, 2021

மதுரை திருமங்கலம் வட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொங்கர் புளியங்குளத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலத்தை மீட்டு தர கோரி கொங்கர் புளியங்குளத்தில் வசித்து வரும் மாயாண்டி கவுண்டரின் மகன் முத்தன் என்பவர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம்
அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கொங்கர்புளியங்குளம் கிராமத்தில் எங்கள் முன்னோர்கள் மற்றும் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 285/ 51 என்ற இடத்தில் சின்ன காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 350 நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோவிலாகும். இக்கோவிலானது 1500 தலைகட்டுக்கு சொந்தமான எங்கள் பங்காளிகள் மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்சமயம் இக்கோவிலை மணி என்பவரது மகன் மகேந்திரன், மற்றும் விஜயா, தலைமையில் இருளாண்டி மகன் செழியன், சௌந்தர், அம்மாள் வெள்ளைச் சாமி, சேகர்,
முத்துகாமு சரவணன்,உள்ளிட்டோர் இக்கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும் கடந்த 5.11.2001 அன்று கோவிலுக்குச் செல்லும் பாதைகளில் முட்களை வெட்டி அடைத்தும் ஆயுதங்களை வைத்து மிரட்டியும், தகாதவர்கள் பேசியும் வருகின்றனர். மேலும் இந்த இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமென்றால் ரூபாய் பத்து லட்சம் கொடுக்க வேண்டுமென பணம் கேட்டு மிரட்டிடு கின்றனர்.

இதுகுறித்து கொங்கர் புளியங்குளம் கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரித்த பொழுது இந்த இடம் முறைப்படி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் என கணக்கில் உள்ளது என கடந்த 1 -11-2021 அன்று சான்று அளித்து உள்ளதாக கூறி உள்ளனர்.


எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் முறைப்படி விசாரணை செய்து எங்களுக்கு சொந்தமான கோவில் காலி இடத்தை மீட்டு தருமாறு கிராம மக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *