• Sat. Mar 22nd, 2025

மதுரை மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி வெளியீடு..!

Byவிஷா

Jun 7, 2023

மதுரை மருத்துவக்கல்லூரியை கூடுதல் வசதியுடன் மேம்படுத்த 30 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவ கல்லூரியாக விளங்கக்கூடிய மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக தற்போது மருத்துவ மாணவர்கள் தங்குவதற்கு விடுதி கட்டப்பட்டுள்ளது. அந்த விடுதியில் தீ தடுப்பு மற்றும் அறிவிப்பு பலகைகள், டேபிள், சேர் உள்ளிட்ட பல்வேறு வகையான கூடுதல் வசதிகள் மேம்படுத்துவதற்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்த புள்ளியை பொதுப்பணித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.