நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.
அனிருத் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்துள்ளது. பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தும் ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்பட்டுவந்தது .
இந்நிலையில்,தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதாலும், கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி
