

டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வென்ற பாஜக வென்று, ஆம் ஆத்மியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. டெல்லியில்
27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சியமைக்கிறது. டெல்லியின் புதிய முதலமைச்சரை அறிவிப்பதற்கான பாஜக எம்.எல்ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டெல்லி ஷாலிமார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற ரேகா குப்தாவை முதலமைச்சராக நியமிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து ரேகா குப்தா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை ரேகா குப்தா சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்
இந்த நிலையில் டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா இன்று பதவியேற்கிறார் . ரேகா குப்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர்கள், பொறுப்பு முதலமைச்சர் அதிஷி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை ரேகா குப்தா பெறுகிறார்.

