• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

குமரியில் மின்சாரத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்..!

மின்சாரத்தைப் பயன்படுத்துவதில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும், கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டன.


மின்சாரம் இல்லாமல் ஓன்றும் இல்லை என்ற நிலைமை தற்போது இருந்து வருகிறது,. அதில் மின்சாரம் கசிவுகள் இல்லாமல் இருக்க என்ன என்ன செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த மின்சதான பொருட்களை பயன்படுத்துதல் வேண்டும். தண்ணீர் கசிவுகள் உள்ள இடங்களில் சுவிட்சுகளை பொறுத்த கூடாது. அரசு உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரர்கள் மூலம் வயரிங் செய்ய வேண்டும். மின் பயன்பாட்டாளர்கள் எவ்வாறு மின்சாரத்தினை சிக்கனமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வுகளை பொது மக்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகின்ற வகையில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் ராமன்புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பாக பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கபட்டன. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.