

தமிழகத்திற்கு நாளை 10 ஆம் தேதி) சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் நேற்று இரண்டு நாட்களாக இடைவிடாது மழை கொட்டியது. கடந்த சனிக்கிழமை இரவிலும், அடுத்த காலையிலும் மிக பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
சென்னையின் பல இடங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை கொட்டியது. சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு நாளை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11-ம் தேதி வட தமிழக கடற்கரையை நெருங்கும் இதன் காரணமாக வடகடலோர மாவட்டங்களுக்கு வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் ஒரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
