• Fri. Apr 19th, 2024

10 மாவட்டங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 ஏரிகள் புனரமைப்பு…

Byகாயத்ரி

Apr 7, 2022

பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் 10 மாவட்டங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 ஏரிகள் புனரமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புதிய அறிவிப்பில்,

*காவிரியில் மழைக்கு முன்னதாக துார்வாருவதை போல் பவானி, அமராவதி, பரம்பிக்குளம் ஆழியாறு வடிநிலங்களில் 1 கோடி ரூபாய் செலவிலும், வைகை, தாமிரபரணி, கோதையாறு வடிநிலங்களில் 1 கோடி ரூபாய் செலவிலும் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

*சிவகங்கை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 50 குறுபாசன கண்மாய்கள் தரப்படுத்துதல் மற்றும் புனரமைப்பு பணிகள் 33.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

*பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற 10 மாவட்டங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 ஏரிகள் புனரமைக்கப்படும்.

*கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு, பரம்பிக்குளம்- ஆழியாறு கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்வதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் 31.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

*டென்மார்க் நாட்டின் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நிலத்தடி நீர் இருப்பை கண்டறியும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

*தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையின் சாய்வு பகுதியில் தென்னை நார் பாய்களை பயன்படுத்தி மண் அரிப்பை தடுக்கும் பணிகள் ரூ 2.20 கோடி மதிப்பீட்டிலும், தஞ்சாவூர் காவிரியில் செயற்கை புவியிழை பயன்படுத்தி தரைகீழ் தடுப்பணை அமைக்கும் பணிகள் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்

*திருநெல்வேலி கஸ்துாரிரெங்கபுரத்தில் புதிய குளம் அமைக்கும் பணிகள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இந்தமாவட்டத்தில் கடல்நீர் உட்புகுதலை தடுக்கும் அடிப்படையில் ரூ 35 கோடி மதிப்பீட்டில் நம்பியாறு மற்றும் அனுமாநதியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும்.

*திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆற்றின் படுகை மட்டத்தை நிலை நிறுத்தும் அடிப்படையில் 27.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படுகை அணைகள் கட்டப்படும்.

*சிவகங்கை வைகை ஆற்றின் குறுக்கே ரூ.32 கோடி, நகரமங்கலம் உபரி வாய்க்காலின் குறுக்கே ரூ. 2 கோடி, தென்காசி உள்ளாற்றின் குறுக்கே ரூ 3.30 கோடி மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டுகளானது கட்டப்படும்

*தென்காசி வாழமலையாற்றின் குறுக்கே 2.50 கோடி ரூபாய், துாத்துக்குடி மலட்டாறுஓடையின் குறுக்கே 3.10 கோடி ரூபாய், ராணிப்பேட்டை பாலாற்றின் குறுக்கே 48 கோடி ரூபாய், திருப்பத்துார் நரியாம்பட்டில் 15 கோடி ரூபாய், வேலுார் பாலாற்றின் குறுக்கே 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரைகீழ் தடுப்பணைகளானது அமைக்கப்படும்.

*கோவை, திண்டுக்கல், கரூர், மதுரை, திருப்பத்துார், திருப்பூர், திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்களிலுள்ள 15 பாசன கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகள் 251 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

*துாத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளபாதிப்புகளை தடுக்கும் அடிப்படையில் மருதுார் மேலக்கால், கடம்பாகுளம் உபரிநீர் போக்கி, வழிந்தோடி கால்வாய் போன்றவற்றில் 37.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

*கோவை, திண்டுக்கல், பெரம்பலுார், சேலம், திருப்பூர், திருவள்ளூர், திருச்சி, வேலுார் போன்ற 8 மாவட்டங்களில் 10 இடங்களில் 70.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தடுப்பணைகள் கட்டப்படும்.

*கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு, விளவங்கோடு வட்டங்களில் வெள்ளபாதிப்புகளை நிரந்தரமாக தடுக்கும் பணிகள் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *