வாசிப்புதான் அறிவை வளர்க்கும், சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த உதவும் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
பாரதி புத்தகாலயம் சார்பில் சிறார்களுக்கான “அரும்பு சிறார் நூலரங்கம்” திறப்பு விழா சென்னை தேனாம்பேட்டையில் ஆயிஷா இரா.நடராஜன் தலைமையில் நடை பெற்றது. இயக்குநர் வெற்றி மாறன் நூல்களின் முதல் விற்பனையை தொடங்கி வைக்க, கவிதா பதிப்பகம் சேது சொக்கலிங்கம் நூல்களை வாங்கிக் கொண்டார்.
அப்போது வெற்றிமாறன் பேசுகையில், குழந்தைகளுக்கு என இவ்வளவு பெரிய புத்தக விற்பனை நிலையம் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. நம் வாழ்க்கை யோடு தொடர்பில்லாத வேறு ஒன்றை தெரிந்து கொள்வதற்கு வாசிப்பு பெரு மளவில் பயன்படுகிறது. நூல்களை சிறிது படித்தாலும் ஆழமாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பிருந்தது. ஆனால் நூல்களை வாசிப் பது என்பது கடந்த காலங்களில் இருந் ததை விட தற்போது குறைந்து வருகிறது. அனைத்தும் டிஜிட்டல் மயமான பிறகு அறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தை வெவ்வேறாக மாற்றி விட்டன.
அனைத்தையும் விக்கிபிடியாவில் தேடும் நிலைக்கு சென்று விட்டோம். இதனால் தற்போது ஞாபக சக்தி குறைந்து வருகிறது. புத்தக வாசிப்பு குறைய குறைய அறிவை வளர்த்துக் கொள்வதின் ஆழம் குறைகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நல்லது கெட்டதை தெரிந்து கொள்வதற்கு வாசிப்பு முக்கியம். வாசிப்பு தான் அறிவை வளர்க்கும். வாசிப்புதான் சமூ கத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த உதவும் என்றார். இன்று குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி வருகின்றனர். அதற்குக் காரணம் நாம் எந்நேரமும் செல்போனை பயன்படுத்துவதுதான். குழந்தைகளுக்கு இன்று நூல்களை வாசிப்பதற்கான பொறுமை இல்லை. நாம் வீட்டில் இருக்கும் போது செல்போனை ஓரமாக வைத்து விட்டு, நூல்களை வாசிக்க வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். அதை தூண்டும் விதமாக நம்முடைய நடவடிக் கைகள் இருக்க வேண்டும் என்றார்.