

சென்னை கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 15 நாட்கள் நீதிமன்றக்காவல் வைக்க நீதிபதி உத்தரவு.
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா, ரெயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார். கொலையாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நள்ளிரவில் துரைப்பாக்கம் கிழக்கு கடற்கரை பகுதியில் சுற்றித் திரிந்த, கொலையாளி சதீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். விசாரணைக்குப் பிறகு இன்று பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை 15 நாட்கள் அதாவது 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
