மதுரை திருமங்கலத்தில் 17வது வார்டு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..
இதன் காரணமாக இன்று அதிகாலையில் 7 மணி முதல் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்கு பகுதியில் பெண்கள் மட்டும் வாக்குப்பதிவில் சுமார் 944 வாக்குகள் மொத்தமுள்ள இன்று காலை 7 மணி முதல் பெண்கள் வரிசையில் நின்று இதுவரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது
பிப்.,19ம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது, இந்த வார்டின் அதிமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் JD விஜயனின் மனைவி உமா போட்டியிடுவதன் காரணமாக திமுக-வினர் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தது காரணமாக மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது..