சென்னை மடிப்பாக்கத்தில் 187. 188 வது வார்டுகளில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக ரேஷன் கடை மடிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இரண்டு வாருக்கும் சேர்த்து ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ எஸ் அரவிந்த் ரமேஷ். திறந்து வைத்தார். இந்த புதிய கடைகளில் பொருட்களை பார்த்து அரிசி மற்றும் இதர பொருட்களை ஆய்வு செய்தார். இதில் அரிசி நல்ல தரமானதாக இருப்பதாக மக்களுக்கு பயனுள்ள ரேஷன் கடையாக இருப்பதாக இந்த நிகழ்ச்சியில் மண்டலம் 14 மண்டல குழு தலைவர் எஸ் வி ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் ஜே.கே. மணிகண்டன் சமினா செல்வம் ஷெர்லி ஜெய் வட்டச் செயலாளர் எம்.கே.ஜெய். மற்றும் கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு இந்த திறப்பு விழா நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.