• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

ByA.Tamilselvan

Aug 26, 2022

ராமநாதபுரத்தை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு.
மத்திய அரசால் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் தகுதியான நபரை மத்திய அரசு தேர்வு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் 46 பேர் கொண்ட பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்பட சில மாநிலங்களில் தலா ஒரு ஆசிரியரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வழங்கும் விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.