• Wed. Mar 22nd, 2023

அதிமுக இணைவு விழாவில் ரக்‌ஷா பந்தன்… முன்னாள் அமைச்சர் தலைமையில் கோலாகலம்!..

By

Aug 22, 2021

திருச்செங்கோட்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளான கொல்லபட்டி, சட்டையம்புதூர் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு, மாற்றுக்கட்சியிலிருந்து அதிமுகவிற்கு வந்த தொண்டர்களுக்கு பெண்கள் ராக்கி கயிறு கட்டினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி, பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர், நாமக்கல் மாவட்ட துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் நிகழ்ச்சியில் கொல்லப்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த பாரா கிரிக்கெட் விளையாட்டு வீரர் அஸ்வினுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி கிரிக்கெட் பேட் மற்றம் பந்து வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *